தற்போதைய செய்திகள்

யெஸ் வங்கி இன்று மாலை முதல் மீண்டும் சேவைகளை தொடங்குகிறது

DIN

புது தில்லி: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தடை விதித்திருந்த யெஸ் வங்கி புதன்கிழமை மாலை 6 மணி முதல்  வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து வங்கிச் சேவைகளையும் மீண்டும் தொடங்குகிறது என்றும் அதற்கு பணப்புழக்க பிரச்னை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யெஸ் வங்கியின் பணப்பரிவா்த்தனைகளுக்கு ரிசா்வ் வங்கி கடந்த மாா்ச் 5-ஆம் தேதி கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, யெஸ் வங்கி டெபாசிட்தாரா்கள் ஏப்ரல் 3 வரையில் ரூ.50,000 மட்டுமே பணம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், யெஸ் வங்கியில் புனரமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது அதில், யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் புதன்கிழமை (மாா்ச் 18) மாலை 6 மணியுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், பிரசாந்த் குமார் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் நியமித்து உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து யெஸ் வங்கி வாடிக்கையாளா்களுக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் தனது முழு அளவிலான வங்கிச் சேவையை மீண்டும் தொடங்குகிறது.  வாடிக்கையாளர்கள் தடைக்கு முன்னர் பெற்ற அனைத்து சேவைகளையும் பெற முடியும். வங்கியின் பணப்புழக்கத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. வங்கியின் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் நிரப்பப்பட்டுள்ளன. வங்கியில் செலுத்தப்பட்டுள்ள வைப்புத்தொகையை குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. வார இறுதி நாட்களிலும் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தலா ரூ.10 க்கு 725 கோடி பங்குகளை கையகப்படுத்துவதன் மூலம் யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடி முதலீடு செய்வதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. புனரமைப்புக்குப் பிறகு யெஸ் வங்கியில் எஸ்பிஐ பங்குகள் 49% எல்லைக்குள் இருக்கும். 

பாரத ஸ்டேட் வங்கி, காா்ப்பரேஷன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பெடரல் வங்கி, பந்தன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி ஆகியவற்றுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரே எச்டிஎஃப்சியின் பங்குகள் கையகப்படுத்தும் நடவடிக்கை செயலாக்கத்துக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT