முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேருக்கு கரோனா; 2 பேர் பலி

ஆந்திரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,463 -ஆக உயர்ந்துள்ளது,

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:


விஜயவாடா: ஆந்திரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,463 -ஆக உயர்ந்துள்ளது, மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை காலை 9 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 60 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கர்னூல் மாவட்டத்தில் 25 பேர், குண்டூர் மாவட்டத்தில் 19 பேர், கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் தலா 6 பேர், விசாகப்பட்டினம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தலா 2 பேருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கர்னூல் மாவட்டத்தில் ஒருவர், நெல்லூர் மாவட்டத்தில் ஒருவர் என 2 தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் 1027 பேர் மாநிலத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் இதுவரை 1,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கர்னூல் மாவட்டத்தில் 411 பேர், குண்டூர் மாவட்டத்தில் 306 பேர், கிருஷ்ணா மாவட்டத்தில் 246 பேர், நெல்லூர் மாவட்டத்தில் 84 பேர்,  சித்தூர் மாவட்டத்தில் 80 பேர், கடப்பா மாவட்டத்தில் 79 பேர், அனந்தபூர் மாவட்டத்தில் 67 பேர், பிரகாசம் மாவட்டத்தில் 60 பேர், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 58 பேர், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 42 பேர், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 பேர் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →