தென்கொரியாவில் கரோனா பாதிப்பு 10,765-ஆக உயர்வு
தென்கொரியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,765- ஆக உயர்ந்துள்ளது.
தென்கொரியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,765- ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
உலக அளவில் இதுவரை 33,08,643 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், தொற்று பாதிப்பால் 2,34,123 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் 10,42,981 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Advertisement
தென்கொரியாவில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று சோதனைகள் முடிவடைந்துள்ளது. மேலும் 8,685 பேருக்கு சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை மட்டும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டள்ள நிலையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10,774 -ஆக உயர்ந்துள்ளது. 9,072 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர், பலி எண்ணிக்கை 248 -ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.