தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு

DIN


திருவாரூர்: கரோனா நோய்த்தொற்று தடுப்பு  நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே சென்று வருவதை  சீர்ப்படுத்தும் விதமாக திருவாரூர்  மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்தது:
கரோனா  நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை  தவிர்க்கும் பொருட்டு தற்போது திருவாரூர்  மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்த அனுமதி அட்டைக்கும் அனுமதி கிடையாது. நாளை  ஞாயிற்றுக்கிழமை  (மே.3)முழு  ஊரடங்காக திருவாரூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும்.  இதில், அவசர  மருத்துவ சிகிச்சைக்கும், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.  இதில் ஏதும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை மூலம்  நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT