தற்போதைய செய்திகள்

இரண்டு நாள்களாக வலையில் சிக்கியிருந்த 4 அடி நீள நல்ல பாம்பு: இளைஞருக்கு பாராட்டு

DIN


சீர்காழி: இரண்டு நாட்களாக வலையில் சிக்கியிருந்த 4 அடி நீள நல்ல பாம்பை மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்ட இளைஞருக்கு பாராட்டு  குவிந்து வருகிறது. 

சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அரவிந்த் என்பவர் வீட்டு கொல்லைப்புறத்தில் பாம்புகள் ஏதும் நுழையாமல் இருப்பதற்காக கட்டியிருந்த வலையில் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சிக்கியது. இரு தினங்களாக வலையில் சிக்கியிருந்த பாம்பின் அருகில் யாராவது சென்றால் சீறியது. இதனால் அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் சீர்காழி புளிச்ச காடு பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர் தினேஷ்க்கு தகவல் கொடுத்தார். தினேஷ் அவ்விடத்திற்கு வந்து வலையில் சிக்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக மீட்டு பின்னர் அதன் காயத்திற்கு மருந்திட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

வலையில் சிக்கிய பாம்பை இளைஞர் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பாராட்டைப் பெற்றது. இளைஞர் தினேஷ் சிறு வயதிலிருந்தே பாம்பு பிடிப்பதில் ஆர்வம் உடையவர். இதுவரை வீடுகளில் புகுந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வீழ்ச்சி: ரூ.36 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

25 தொகுதிகளின் இடைத்தேர்தல்: நிலவரம் என்ன?

காந்தி நகரில் தொடர்ந்து முன்னிலையில் அமித்ஷா!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை இடைத்தேர்தல்: முன்னாள் முதல்வர் மனைவிக்கு பின்னடைவு

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

SCROLL FOR NEXT