தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்புப்பணியில் பலியான விஏஓ குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

DIN

திருச்சி: கரோனா தடுப்புப் பணியின்போத உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.50 லட்சம் வழங்கி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், சிறுகமணி அருகேயுள்ள சேதுராப்பட்டியில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் இங்கு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். இங்கு, சிறுகமணி கிழக்குப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் ச.குமார் (46),  களப்பணியில் ஈடுபட்டிருந்தார். புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி உயிரிழந்தார்.

இதையடுத்து, இவரது குடும்பத்துக்கு சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கி எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமல்லாது, கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT