தற்போதைய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் லாரி விபத்து: புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 24 பேர் பலி: 20 பேர் காயம்

DIN



உத்தரப் பிரதேச மாநிலம் அவ்ரயாவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 24 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பொது முடக்கம் காரணமாக போதிய வருமானம், உணவு இல்லாமல் அவதிபட்டு வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சாலைகளில் நடந்தும், லாரிகளிலும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு 81  புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற மினி வேன், சனிக்கிழமை அதிகாலை உத்தரப் பிரதேச மாநிலம் அவ்ரயா அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 24 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

படுகாயமடைந்த 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பிகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தகவலறிந்த நிகழ்விடத்திற்கு விரைந்து மூத்த அதிகாரிகள், மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT