தற்போதைய செய்திகள்

கரோனா: உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது

DIN


ஜெனீவா: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,58,441 லட்சத்தை தாண்டியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று வளா்ந்த நாடுகளைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் உலக அளவில் உயிரிழப்பு விகிதம் சுமாா் 3 சதவீதமாக இருந்தது. எனினும், சில நாடுகளில் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வந்தன. பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற ஒருசில நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் விகிதம் கடுமையாக அதிகரிக்கவே, உலக உயிரிழப்பு விகிதம், ஆரம்ப கட்டத்தைவிட அதிகரித்து தற்போது 8 முதல் 9 சதவீதம் வரை காணப்படுகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,58,441 லட்சத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,85,825 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 3,24,889 பேர் பலியாகியுள்ளனர். 

தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 2,702,495 பேரில் 45,426-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT