தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில்  40 ஆயிரம் கோவில்களில் ஜூன் 1 முதல் வழிபட அனுமதி?

DIN


சென்னை: தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கோவில்களும் மூடப்பட்டன. இதனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் கோவில்களைக் குறைவான பக்தர்களுடன் திறக்கலாமா என்பது குறித்து அறநிலையத்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இணையதளம் மூலம் இ-பாஸ் விண்ணப்பித்து அதைக் கொண்டு வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என ஆலோசனை நடத்தி வருவதாகவும், ஒரு நாளைக்கு ஒரு கோவிலுக்கு 500 இ-பாஸ்கள் வீதம் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட அறநிலையத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னமும் இந்தத் தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT