தற்போதைய செய்திகள்

நாளை ஸ்டெர்லைட் போராட்ட நினைவு நாள்: 4 பேருக்கு மேல் கூட தூத்துக்குடியில் தடை

DIN


ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 15 பேர் உயிர்துறக்கக் காரணமான, மே 22 ஆம் தேதியான நாளை வெள்ளிக்கிழமை தூத்துக்குடியில் நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை  மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். 

இதனிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவஞ்சலி நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நாளை வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் பொதுமக்கள் எந்த காரணத்தைக் கொண்டும் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் கட்சிகள் அமைப்புகள், வணிக அமைப்புகள் யாரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT