தற்போதைய செய்திகள்

ஆத்தூரில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அனுப்பிவைப்பு

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அவர்கள் கரோனா தொற்று பாதிப்பால் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் மாவட்ட நிர்வாகம் வழங்கி வந்தது. இதனையடுத்து அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வால் வெளி மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தயார் என அறிவிப்பை அடுத்து அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி வந்தனர். 

கடந்த நான்கு நாட்களாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை 74 பேரை பிகார் மாநிலத்திற்கு ஆத்தூர் வட்டாட்சியர் பிரகாசம் அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT