தற்போதைய செய்திகள்

பெருவில் கரோனா பாதிப்பு 115,754 பலி  3,373 

DIN

லிமா: பெருவில் சனிக்கிழமையன்று 4,056 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,15,754 ஆக உயர்ந்துள்ளது, 3,373 பேர் பலியாகியுள்ளனர். 

788,341 பேரிடம் நடத்தப்பட்ட தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை தலைநகர் லிமாவில் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நோய் பரவலை தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் குழுவின் தலைவர் விசென்ட் செபாலோஸ் தெரிவித்தார்.

பெருவில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000 முதல் 20,000 ஆகவும், தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கைகளின் எண்ணிக்கையை 1,000 முதல் 2,000 ஆகவும் உயர்த்தும் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலின் புதிய நீட்டிப்பு, ஆடை மற்றும் வீட்டு உபகரணங்கள் விற்பனை, தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை சேவைகள், அத்துடன் அவசரகால மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகள் போன்ற பொருளாதாரத்தின் சில துறைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும்.

"இந்த சேவைகள் அனைத்தும் வீட்டிலேயே வழங்கப்படும்" என்று அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த சில விளையாட்டுகளும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT