தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1,03,330 -ஆக உயர்வு 

DIN


அமெரிக்காவில் கரோனா தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 1,03,330 -ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தொடர்ந்து 210 நாடுகளுக்கு மேல் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்றை முற்றிலுமாக அழிப்பதற்கு இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

இந்நிலையில், இந்த நோய்த்தொற்றுக்கு வல்லரசு நாடான அமெரிக்கா பெரும் அளவில் பாதிப்பையும் உயிர் சேதங்களையும் சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 17,68,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,03,330 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் 4,98,725 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,66,406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 17,202 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலக அளவில் 59,05,846 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 362,024 பேர் பலியாகியுள்ளனர். 25,79,877 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 29,09,973 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 53,972 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  தொற்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT