தற்போதைய செய்திகள்

நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி: முதல்வர் அறிவிப்பு 

DIN


சென்னை: நாளை முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என 60 பேர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்டு உள்ள அறிக்கையில், நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 31) முதல் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் என அதிகபட்சமாக 60 பேர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒருமுறை மட்டும் முன் அனுமதி பெற்றால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT