தற்போதைய செய்திகள்

ஹர்திக்-இஷான் அதிரடி : தில்லிக்கு 201 ரன்கள் இலக்கு

DIN

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தனர்.

இன்று முதல் இந்த வருட ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் ஆட்டங்கள் தொடங்குகின்றன. துபையில் இன்று நடைபெறவுள்ள முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதி வருகின்றனர்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக டி காக், ரோஹித் சர்மா களமிறங்கினர், இந்நிலையில் அஸ்வின் வீசிய 2வது ஓவரில் ரோஹித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின் டி காக்குடன் இணைந்து சூர்யகுமார் யாதவ், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்வின் வீசிய 8வது ஓவரில் டி காக் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து அரைசதம் கடந்த சூர்யகுமார் (51), பொலார்டு (0), குர்னல் பாண்டியா (13) ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.

இறுதியாக அதிரடியில் இறங்கிய இஷான் கிஷனும், ஹர்திக் பாண்டியாவும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர்.

கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களும், ஹர்திக் 14 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தில்லி அணி தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

SCROLL FOR NEXT