தற்போதைய செய்திகள்

ஹைதராபாத் வெற்றிக்கு 132 ரன்கள் இலக்கு

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் போட்டியின் 2வது பிளேஆஃப் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றனர்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியில் தொடக்க வீரராக விராட், படிக்கல் களமிறங்கினார்கள்.

ஹோல்டர் வீசிய 2வது ஓவரில் விராட் (6), 4வது ஓவரில் படிக்கல் (1) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

இதையடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் வழக்கம்போல் அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினார். ஆனால் மறுமுனையில் பின்ச் (32), மொய்ன் (0), துபே (8) மற்றும் சுந்தர் (5) ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தார்கள்.

அரைசதம் கடந்த டிவில்லியர்ஸ் 56 ரன்களில் நட்ராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது.

சைனி (9), சிராஜ் (10) ரன்களில் அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT