புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுகொலை
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் பொதுமக்களில் ஒருவர் பலியானதாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் பொதுமக்களில் ஒருவர் பலியானதாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பாம்பூரின் லால்போரா பகுதியில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் இருவருக்கு காயம் ஏற்பட்டது, அதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் வெள்ளிக்கிழமை காலை தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஒருவர் சரணடைந்தார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.