மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் பிரேமலதா விஜயகாந்த் . 
தற்போதைய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை பார்க்கலாம்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பார்க்கலாம். அவர் நலமாக உள்ளார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

DIN

2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பார்க்கலாம். அவர் நலமாக உள்ளார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளரிடம் கூறியது:

வேல் யாத்திரை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், பொது மக்களுக்கோ சட்ட ஒழுங்கிற்கோ எந்தவொரு பிரச்னை ஏற்பட்டாலும் அரசாங்கம் தன் கடமையை செய்யும்.  ஆனாலும் இந்தத் தடை குறித்த விளக்கத்தை தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும். 

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அரசு அனுமதி மறுத்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையையும் நாம் யோசிக்க வேண்டும் என்றார். 
 
கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜனவரி முதல் வாரத்திற்குள் தேமுதிக செயற்குழு கூட்டப்பட்டு  கூட்டணி குறித்த தெளிவான முடிவை தலைவர் அறிவிப்பார்.

தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை நலமாக  உள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தைப் பார்க்கலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT