முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றக் காவல்

கர்நாடக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக பாஜக தலைவரும், தார்வாட் மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான யோகேஷ் கௌடா கடந்த 2016ஆம் ஆண்டு, ஜூன் 15ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அம்மாநில காவல்துறையினர் 7 பேரை கைது செய்தனர். 

பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேரை கடந்த மார்ச் மாதம் சிபிஐ கைது செய்தது. இந்த நிலையில் யோகேஷ் கௌடா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியை குல்கர்னியிடம் விசாரணை நடத்திய சிபிஐ நவம்பர் 5ஆம் தேதி கைது செய்தது.

இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காணொளி மூலம் வினய் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 23ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →