படம்: முகநூல்-பன்வர் லால் மேக்வால் 
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தான் அமைச்சர் பன்வர் லால் மேக்வால் காலமானார்

ராஜஸ்தான் சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர் லால் மேக்வால் திங்கள்கிழமை காலமானார்.

ANI

ராஜஸ்தான் சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர் லால் மேக்வால் திங்கள்கிழமை காலமானார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் பன்வர் லால் மேக்வால் (வயது 72). இந்தாண்டு மே மாதம் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், திங்கள்கிழமை சிகிச்சைப் பலனளிக்காமல் மருத்துவமனையில் காலமானார்.

மேக்வாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் கூறுகையில்,

"எங்கள் மூத்த அமைச்சர் பன்வர் லால் மேக்வால் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு காலமானதில் மிகுந்த வருத்தம் அடைகிறேன். 1980ஆம் ஆண்டு முதல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இந்த மிகக் கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT