முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் திறக்கப்பட்ட கல்லூரிகள்

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பெங்களூரு கல்லூர் வளாகத்தில் சமூக இடைவெளிவிட்டு நிற்கும் மாணவர்கள்
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. தற்போது தொற்றின் பரவல் நிலையின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கர்நாடக மாநிலத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் கிருமிநாசிகளைப் பயன்படுத்துதல் ஆகியவைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கிருமிநாசிகளைக் கொண்டு சீரான இடைவெளியில் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. 

கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கரோனா பரிசோதனை முடிவை சமர்பித்துள்ளனர்.

கரோனா முடக்கத்திற்கு பிறகு கல்லூரிக்கு வந்த மாணவி ரித்திகா கூறுகையில்,

“கல்லூரிக்கு வருவதற்கு முன் நாங்கள் கரோனா பரிசோதனை சான்றிதழை சமர்பித்தோம். அரசுத் தரப்பில் வெளியிட்ட நெறிமுறைகளை பின்பற்றி வருகிறோம். மீண்டும் கல்லூரிக்கு வருவதில் மகிழ்ச்சியாக உள்ளேன், இருப்பினும் பதற்றமாக உள்ளது.” என தெரிவித்தார். 

மேலும், கா்நாடகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை டிசம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும். அத்துடன் பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியா் கல்லூரி, மருந்தாளுநா் கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →