பிகார் அரசியலில் திருப்பம்: கல்வி அமைச்சர் ராஜிநாமா
பிகாரில் புதிதாக பதவியேற்ற கல்வி அமைச்சர் மேவாலால் செளத்ரி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
பிகாரில் புதிதாக பதவியேற்ற கல்வி அமைச்சர் மேவாலால் செளத்ரி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு புதிய அமைச்சரவை நவம்பர் 16 ஆம் தேதி பதவியேற்றது. நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மேவாலால் செளத்ரி கல்வி அமைச்சராக பதவியேற்றார்.
மேவாலால் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டி எழுந்து வந்த நிலையில் பதவியேற்று 4 நாளில் ராஜிநாமா செய்தது பிகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.