முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாபா பெஹ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 20 நவம்பர், 2020 at 9:16 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாபா பெஹ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் பத்மநாபா கூறுகையில்,

Advertisement

ஒடிசாவில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.