கார்க் அதிரடி அரைசதம்: சென்னைக்கு 165 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ரன்கள் எடுத்தது.
தற்போதைய செய்திகள்கார்க் அதிரடி அரைசதம்: சென்னைக்கு 165 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ரன்கள் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தீபக் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார்.
அடுத்து களமிறங்கிய மணீஸ் பாண்டே, வார்னருடன் இணைந்து சற்று நிதானமாக ஆடினார். இந்நிலையில் வார்னர் 28 ரன்களில் அவுட்டானார், இவரைத் தொடர்ந்து பாண்டே 29 ரன்களிலும், வில்லியம்ஸன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின் களமிறங்கிய அபிஷேக், கார்க் அதிரடியாக விளையாட அணியின் ரன் சற்று வேகமாக உயர்ந்தது. இருப்பினும், அபிஷேக் 31 ரன்களில் அவுட்டானார்.
அதிரடியை தொடர்ந்த கார்க் 26 பந்துகளில் 51 ரன்களும் அப்துல் சமத் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தனர் ஹைதராபாத் அணியினர்.
இதன்மூலம் சென்னை அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்காக நிர்ணியிக்கப்பட்டது.