முகப்பு
தற்போதைய செய்திகள்

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைவு

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் மின் உற்பத்தி 168 மெகாவாட்டிலிருந்து, 126 மெகாவாட்டாக குறைந்து வெள்ளிக்கிழமை உற்பத்தியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
லோயர்கேம்ப்
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் மின் உற்பத்தி 168 மெகாவாட்டிலிருந்து, 126 மெகாவாட்டாக குறைந்து வெள்ளிக்கிழமை உற்பத்தியானது.

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் என 168 மெகாவாட் மின்சார உற்பத்தி வியாழக்கிழமை வரை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மூன்று மின்னாக்கிகள் மட்டும் தலா 42 மெகாவாட் என 126 மெகாவாட் உற்பத்தியானது.

அணை நிலவரம்

முல்லைப்பெரியாறு அணைக்குள் வெள்ளிக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 130.30 அடி உயரமாகவும், நீர் இருப்பு 4,767 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 593 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1400 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி பகுதிகளில் மழை பொழிவு இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →