அத்திக்கடவு திட்டத்தில் தொரவலூர் குட்டைகளை சேர்க்காவிட்டால் உண்ணாவிரதப் போரட்டம்
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் தொரவலூர் குட்டைகளை சேர்க்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
அவிநாசி: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் தொரவலூர் குட்டைகளை சேர்க்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சம்பத்குமார் கூறியது:
அத்திக்கடவு திட்டப்பணிகள் விரைவாக நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் விடுபட்டுள்ள குட்டைகளை சேர்க்க வேண்டும் என பல்வேறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விடுபட்ட குட்டைகளை சேர்ப்பது குறித்த தெளிவான விளக்கம் அரசிடம் இருந்து, இதுவரை வரவில்லை. அரசு, விடுபட்ட குட்டைகளுக்கு உடனடியாக திட்ட அறிக்கை தயார் செய்து, இதற்கு நிதியும் ஒதுக்க வேண்டும். குறிப்பரா தொரவலூர் ஊராட்சியில் ஒரு குட்டை கூட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இடம் பெறவில்லை. இத்திட்டம் நிறைவேறுவதற்காக அவிநாசியில், நடைபெற்ற 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த 14 பேரில் 3 பேர் தொரவலூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு விடுபட்ட குட்டைகளை சேர்க்க தாமதப்படுத்தினால், தொரவலூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தொரவலூரில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம். என்று கூறினார்.