முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5,088 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,088 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 அக்டோபர், 2020 at 6:13 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,088 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,088 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1295 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,40,943 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் 68 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,052 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 5,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,86,454 பேர் குணமடைந்துள்ளனர். 44,437 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 87,341 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 80,44,447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 124 என மொத்தம் 190 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.