முகப்பு
வார்னர்-பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி
தற்போதைய செய்திகள்

வார்னர்-பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி: பஞ்சாபிற்கு 202 ரன்கள் இலக்கு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 201 ரன்கள் குவித்தது. 

தற்போதைய செய்திகள்

வார்னர்-பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி: பஞ்சாபிற்கு 202 ரன்கள் இலக்கு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 201 ரன்கள் குவித்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
வார்னர்-பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி
பகிர்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 201 ரன்கள் குவித்தது. 

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் முதலில் களமிறங்கிய வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் அதிரடியான துவக்கம் தந்தனர். இந்த கூட்டணியை பிரிக்க பஞ்சாப் அணி செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்த நிலையில் ரவி பிஸ்னோவ் வீசிய 15 ஆவது ஓவரின் முதல் பந்தில் வார்னர் 52 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் 4வது பந்தில் பேர்ஸ்டோவ் 55 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

பின் களமிறங்கிய சமத் (8), பாண்டே (1), கார்க் (0) மற்றும் அபிஷேக் (6) ஆட்டமிழந்தார்கள். 

இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது ஹைதராபாத் அணி.  

முழு கட்டுரையைப் படிக்க →