ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களுக்கு ஒப்புதல்
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களின் கீழ் 25 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களின் கீழ் 25 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,
அக்டோபர் 5 ஆம் தேதி மலிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டுவசதிக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ. 4,197 கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டத்தில் சுமார் 25,048 பயனாளர்களுக்கு வீடு கட்டும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரூ. 12,079 கோடி மதிப்பில் 123 திட்டங்களில் 81,308 பேர் பயனடைவதற்கான திட்டங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.