அமேசான்: வீடுதேடிச் சென்று பொருள்களை வழங்க மின்னணு வாகனம் அறிமுகம்
அமேசானில் வீடுதேடிச் சென்று பொருள்களை வழங்க சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின்னணு வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அமேசானில் வீடுதேடிச் சென்று பொருள்களை வழங்க சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின்னணு வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ரிவியான் (Rivian) நிறுவனத்துடன் இணைந்து இந்த மின்னணு வாகனத்தை அமேசான் நிறுவனம் தயாரித்துள்ளது.
2040-ஆம் ஆண்டிற்குள் சுற்றுச் சூழலில் கார்பன் மாசுபாட்டை குறைக்கும் உறுதிமொழியில் அமேசான் நிறுவனமும் பங்கெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் 10 ஆயிரம் மின்னணு டெலிவரி வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
Advertisement
2022-ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் உள்ள அமேசான் கிளைகளில் மின்னணு வானங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் மின்னணு டெலிவரி வாகனங்கள் என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
வீட்டிற்கு சென்று பொருள்களை வழங்கிவரும் ஓட்டுநருக்கு உடல் ரீதியாக எந்தபாதிப்பும் ஏற்படாத வகையில் ரிவியான் நிறுவனத்துடன் இணைந்து இந்த வாகனங்களை அமேசான் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதற்காக ரிவியான் நிறுவனத்தில் 440 மில்லியன் டாலர்களை அமேசான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஓட்டுநடுக்கு வசதியாக பெரிய வின் ஷீல்ட் உடனும், வாகன நெரிசல் சென்சார் உடனும் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.