கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் 20-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ANI

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் மத்திய அரசால் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி, மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாபில் விவசாயிகள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், 20வது நாளாக தொடர்ந்து தங்களது ரயில் மறியல் போராட்டத்தை கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் சமிதியை சேர்ந்த விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT