தெலங்கானா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குண்டா மல்லேஷ் 
தற்போதைய செய்திகள்

தெலங்கானா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குண்டா மல்லேஷ் காலமானார்

தெலங்கானா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குண்டா மல்லேஷ் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார்.

UNI

தெலங்கானா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குண்டா மல்லேஷ் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார்.

தெலங்கானா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், 4 முறை பெல்லம்பள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குண்டா மல்லேஷ் (வயது 73).

சிறுநீரக நோயாள் பாதிக்கப்பட்ட இவர் நிஜாம் இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சயின்ஸில் (நிம்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார்.

மேலும் சிபிஐ மாநில செயலாளர் சதா வெங்கட் ரெட்டி கூறுகையில், மல்லேஷின் உடல் மக்தூம் பவனில் அமைந்துள்ள மாநில கட்சி அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என கூறினார்.

மல்லேஷின் மறைவிற்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT