ஆத்தூர் நகர காவல் ஆய்வாளரை முற்றுகை
ஆத்தூரில் சாலையோர வியாபாரியை தரைகுறைவாக பேசி எரிவாயு உருலையை எடுத்துச் சென்ற நகர காவல் ஆய்வாளரை செவ்வாய்க்கிழமை முற்றுக்கையிட்ட வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூரில் சாலையோர வியாபாரியை தரைகுறைவாக பேசி எரிவாயு உருலையை எடுத்துச் சென்ற நகர காவல் ஆய்வாளரை செவ்வாய்க்கிழமை முற்றுக்கையிட்ட வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் திமுக 9வது வார்டு கிளை செயலாளர் சூப்வேல்முருகன் (வயது 42) என்பவர் சூப் மற்றும் பிரியாணி கடை தள்ளுவண்டியில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்தவாரம் நெடுஞ்சாலையில் தார்சாலை அமைந்ததால் அனைத்து சாலையோரக் கடைகளை அகற்றி விட்டு சாலை அமைத்தனர். இதனையடுத்து சாலையோரக் கடை வியாபாரிகள் மிகவும் பாதித்த நிலையில் இருந்தனர்.
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரம் செய்யமுடியாத நிலையில் தள்ளப்பட்டனர். செவ்வாய்க்கிழமை மாலை வேல்முருகன் கடையை வைத்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆத்தூர் நகர் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் வேல்முருகன் மற்றும் மனைவியை தரக்குறைவாக பேசியும் எரிவாயு உருளையை எடுத்துக்கொண்டு சென்றார்.
தகவல் அறிந்த திமுகவினர் மற்றும் நண்பர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோர் திரண்டு ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும் சாலையோர வியாபாரிகள் தாங்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.