முகப்பு
தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் மழையால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

தெலங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
தெலங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு
பகிர்:

தெலங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

சந்திரகுண்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுவர் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இம்ராஹிம்பட்டணம் பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து 40 வயது தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர்.

சந்தியகுண்டா பகுதியில் தொடர் கனமழையில் பாறைகள் சரிந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதின் ஓவைசி நேரில் சென்று பார்வையிட்டார்.

தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சேதமடைந்த பகுதிகளில் காவல்துறையினருடன் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →