முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆயுதங்களுடன் காணாமல் போன பாதுகாப்புப் படை வீரர்கள் கைது

மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் காணாமல் போன இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
கோப்புப்படம்
பகிர்:

மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் காணாமல் போன இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சடூராவில் உள்ள ஒரு சிறப்பு பாதுகாப்புப் படையின் குழுவின் முகாமில் இருந்து இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகளுடன் அல்தாஃப் உசேன் என்ற பாதுகாப்புப் படை வீரரும்,  சடூராவுக்கு அருகிலுள்ள நாகம் பகுதியில் உள்ள முகாமில் இருந்து எஸ்.எஸ்.பி. படையின் காவலர் ஜஹாங்கிர் பட் ஆகிய இருவரும் புதன்கிழமை காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்து கைது செய்தனர், அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது என காஷ்மீர் சரக ஐ.ஜி. தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.