தற்போதைய செய்திகள்

மணப்பாறையில் குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம்

DIN

மணப்பாறையில் சாம்பட்டி கிராம ஊராட்சி மற்றும் மணவை குயின்ஸ் சங்கம் சார்பில் மியாவாக்கி முறையில் பூவனம் குறுங்காடுகள் அமைக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருமலையான்பட்டி கிராமத்தில், ஊராட்சிக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் செண்ட் பரப்பளவு நிலத்தில் சாம்பட்டி கிராம ஊராட்சி மற்றும் மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து செயல்படுத்த இருக்கும் மியாவாக்கி முறையிலான பூவனம் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்திற்கான தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

ஊராட்சி ஆணையர்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, வனவர் விடுதலைசெல்வி, சூழலியல் தலைவர் சோலைரத்தினம், சூழலியல் எழுத்தாளர் பாமயன் ஆகியோர் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கிராமிய ஒயிலாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பில், பூண்டுகள், பறவைகள் யாவுக்குமான மகிழ்வனம் என்ற நோக்குடன் பூவனம் என்னும் குறுங்காடுகள் அமைக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

பொதுமக்களுக்கு சொற்பொழிவு, நாடகம், கும்மிப்பாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் வாயிலாக காடு வளர்ப்பு, கரோனா விழிப்புணர்வு ஆகியவை விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கம் தலைவர் சோபனா ஆனந்த் மற்றும் சாம்பட்டி ஊராட்சி பிரதிநிதிகள் செய்திருந்தனர். விழாவில் சுற்று வட்டார ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், வன ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT