மங்களக்குடி தமுமுக 25 ம் ஆண்டு வெள்ளி விழா
மங்களக்குடியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கிளை கழகம் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாடானை: மங்களக்குடியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கிளை கழகம் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் கெளரவிக்கப்பட்டு, பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கபட்டது. பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.
இதில் கிளை தலைவர் ஜாஹிர்ஹுசைன் தலைமை வகித்தார். தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக் பாட்சா, மாவட்டத் தலைவர் பட்டானி மீரான், செயலர் வழக்கறிஞர் ஜிப்ரி, ஒன்றியத் தலைவர் பீர்முகம்மது, சமுக நீதி மானவர் இயக்கம் ஒன்றிய செயலர் அன்சாரி, ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக்கிம், ஒன்றிய கவுன்சிலர்ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மூத்த நிர்வாகிகள் அப்துல் அஜிஸ், கமால் முஸ்தபா, துல்பக்கர் கலிலுல்லாஹ், சாகுல், அலி ஹசன், பத்திரிக்கையாளர் மங்களக்குடி சித்திக் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் ஹலிபா நன்றி கூறினார்.