முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை கோரி போராட்டம்

நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் பெயரில் அறிவிக்க அரசாணை வெளியிடக் கோரி தொடர்ச்சியாக 300 ஆவது நாள் கருப்புச்சட்டை போராட்டம் நடைபெற்று வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை கோரி போராட்டம்
பகிர்:

நெல்லையில் தேவேந்திர குல வேளாளர் பெயரில் அறிவிக்க அரசாணை வெளியிடக் கோரி தொடர்ச்சியாக 300 ஆவது நாள் கருப்புச்சட்டை போராட்டம் நடைபெற்று வருகிறது.

பட்டியல் பிரிவில் உள்ள ஏழு பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அறிவிக்க அரசாணை வெளியிடக் கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்புச்சட்டை போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் தொடங்கி 300 ஆவது நாளானதையடுத்து  வெள்ளிக்கிழமை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜ சோழன், மாவட்ட இளைஞரணி செயலர் கிங் தேவேந்திரன், மாவட்ட பொருளாளர் வே.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலர் செ.நெல்லையப்பன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், மாநில மகளிர் அணிச் செயலர் நளினி சாந்தகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.