முகப்பு
தற்போதைய செய்திகள்

6 மாதங்களுக்கு பிறகு தேக்கடியில் படகு சவாரி தொடக்கம்

இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் சனிக்கிழமை படகு சவாரி  தொடங்கியது.

Updated On : 5 செப்டம்பர், 2020 at 6:12 PM
6 மாதங்களுக்கு பிறகு தேக்கடியில் படகு சவாரி தொடக்கம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:45 PM

கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் சனிக்கிழமை படகு சவாரி  தொடங்கியது.

தேனி மாவட்டம் அருகே உள்ளது சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி ஏரி. இங்கு படகு சவாரி செய்வதை உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவார்கள்.

கடந்த மார்ச் 10-ல் கரோனா தொற்று காரணமாக, தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது, தற்போது  சுமார் 6 மாதங்களுக்கு பிறகு, சனிக்கிழமை இரண்டு படகுகள் இயக்கப்பட்ட உள்ளதாக கேரள மாநில சுற்றுலா கழகத்தினர் அறிவித்தனர்.

Advertisement

அதன்பேரில் சனிக்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு மதியம் மூன்று முப்பது மணிக்கு என இரண்டு படகுகள் இயக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தேக்கடி ஏரியில் படகுகள் இயக்கப்பட்டதால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு படகு சவாரி செய்தனர்.

வனத்துறையினர் முக கவசம் மற்றும் கிருமி நாசினி மூலம் கை கழுவுதல் சமூக இடைவெளியை பயன்படுத்துதல் போன்றவைகளை படகு சவாரியின் போது அறிவுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.