தற்போதைய செய்திகள்

இந்தியாவின் மிகப்பெரிய பன்றிப் பண்ணை மேகாலயாவில் தொடக்கம்

ANI

இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சிப் பண்ணையை ரூ. 209 கோடி மதிப்பில் மேகாலயாவில் வியாழக்கிழமை  மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறியதாவது, இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சி பண்ணையை மேகாலயத்தில் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தது பெருமையாக உள்ளது என கூறினார். 

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ‘ஆத்ம நிர்பார்’ திட்டத்தின் கீழ் ஒதுக்கிய ரூ. 209 கோடியில் உருவாக்கப்பட்ட பன்றிப் பண்ணையின் மூலம் மேகாலயாவில் பன்றி இறைச்சி தன்னிறைவு பெறும் என கூறினார்.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த பண்னை மூலம் 35 ஆயிரம் பன்றி விவசாயிகள் பயனடைவார்கள்.

இதன்மூலம், புதிதாக 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். மேலும், 300 முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT