துபையில் டிண்டர் செயலி மூலம் ஏமாற்றிய பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை 
தற்போதைய செய்திகள்

துபையில் டிண்டர் செயலி மூலம் ஏமாற்றிய பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

துபையில் ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை டிண்டர் செயலி மூலம் கவர்ந்து ஏமாற்றிய நைஜீரிய பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

துபையில் ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை டிண்டர் செயலி மூலம் கவர்ந்து ஏமாற்றிய நைஜீரிய பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

துபையில் சுற்றுலா விசாவில் வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் டிண்டர் செயலியில் பிரேசில் பெண் என்று நினைத்து ஒரு பெண்ணிடம் நட்பை ஏற்படுத்தியுள்ளார். பின் அவரை சந்திக்க கடந்த டிசம்பர் மாதம் பிசினஸ் பே பகுதிக்கு சென்றார்.

அப்பகுதியில் அந்த பெண்ணின் குடியிருப்பை அடைந்தவுடன் நைஜீரியாவைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்ளே இழுத்து தாக்கியுள்ளனர். அவரிடம் இருந்த சுமார் ரூ. 4 லட்சம் பணத்தை கொல்லையடித்தனர். 

இந்நிலையில், அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவரை நிர்வாணமாக்கி காணொளி பதிவு செய்துள்ளனர். மேலும், காவல் துறையில் புகார் அளித்தால் பெண்ணை தாக்கியதாக நாங்கள் புகார் செய்வோம் என கூறியுள்ளனர்.

ஒரு நாள் முழுவதும் அடைத்து வைக்கப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து துபை காவல் துறையில் அவர் புகார் அளித்தார். இவரது புகாரை அடுத்து நைஜீரிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்த பெண்ணிற்கு துபை நீதிமன்றம் தற்போது 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT