தென்பெண்ணையாற்றில் ரூ.25.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அணையை மாநில சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் திறந்து வைத்தார். 
தற்போதைய செய்திகள்

தென்பெண்ணையாற்றில் ரூ. 25.35 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு: அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் தளவானூரில், தென்பெண்ணையாற்றில் ரூ. 25.35 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இதனை மாநில சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

DIN

விழுப்புரம் மாவட்டம் தளவானூரில், தென்பெண்ணையாற்றில் ரூ. 25.35 கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இதனை மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருகே தளவானூர் பகுதியில், தென் பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு கட்டும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது.

ரூ.25.35 கோடி மதிப்பில் இந்த அணைக்கட்டு 400 மீட்டர் நீளமும் 3.1 மீட்டர் உயரத்திலும் கட்டப்பட்டது. அணையின், இரு புறங்களிலும் தண்ணீர் திறந்துவிட மணற் போக்கிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தளவானூர் தென்பெண்ணையாற்றில் ரூ. 25.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அணை.

இந்த அணைக்கட்டு நொடிக்கு 1,46215 கன அடி நீரை வெளியேற்றும் திறன் கொண்டது. மணற் போக்கிகள் மூலம் 5105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும். இதன் மூலம் தென் பெண்ணை ஆற்றின் சுற்றியுள்ள 13 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெற்று பயன்பெறும்.

கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் 87 கிணறுகள் பயன்பெறும். 2114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதன் வழியாக மலட்டாறு, வாலாஜா, எனதிரிமங்கலம் கால்வாய்கள் பிரிந்து செல்கிறது. இதன் மூலம் இரு மாவட்டங்களில் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, எம்எல்ஏ முத்தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT