முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்கள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு செட்டியார்பட்டி சிஐடியு டாக்சிவேன்  சங்கத்தின் தலைவர் சேவுகபாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

மோட்டார் தொழிலையும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி சிஐடியூ அகில இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் மற்றும் அனைத்து மோட்டார் வாகன உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் டாக்சி வேன் சங்கத்தின் செயலாளர் கண்ணன், சத்திரப்பட்டி சங்க தலைவர் அழகர்சாமி சிஐடியூ நிர்வாகிகள் சந்தானம்,வீரசதானந்தம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்க நிர்வாகி காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →