பிருத்வி ஷா அரைசதம் : சென்னைக்கு 176 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தில்லி கேபிடல்ஸ் அணி.
தற்போதைய செய்திகள்பிருத்வி ஷா அரைசதம் : சென்னைக்கு 176 ரன்கள் இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தில்லி கேபிடல்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தில்லி கேபிடல்ஸ் அணி.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் தில்லி, சென்னை அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தில்லி அணியில் முதலில் களமிறங்கிய பிருத்வி ஷா, தவான் ஜோடி நிதாமான தொடக்கம் தந்தது. இந்நிலையில் பிருத்வி ஷா (64), தவான் (35) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின் களமிறங்கிய தில்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் (37) மற்றும் மார்கஸ் ஸ்டாய்னில் (5) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 175 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் சென்னை அணியின் வெற்றிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.