புது தில்லியில் புதிதாக 3,834 பேருக்கு கரோனா
புது தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 3,834 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:55 PM
புது தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 3,834 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 3,834 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2,60,623 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 36 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 5,123 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்றில் இருந்து 3,509 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 2,24,375 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 31,125 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.