மகாராஷ்டிரத்தில் 13 லட்சத்தைக் கடந்த கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 17,794 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:55 PM
மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 17,794 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 17,794 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 13,00,757 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 416 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 34,761 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 19,592 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 9,92,806 ஆக உள்ளது. தற்போது 2,72,775 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.