தற்போதைய செய்திகள்

கரோனா: எந்தெந்த மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு?

DIN

கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து கரோனா பாதிப்பிற்கேற்ப அந்தந்த மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

மகாராஷ்டிரம்:

நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் மார்ச் 28 முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மகாராஷ்டிரத்தில் நேற்றைய பாதிப்பு 59,907ஆகும்.

தில்லி:

தலைநகர் தில்லியில் கரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் நேற்றைய கரோனா பாதிப்பு 5,506ஆகும்.

சத்தீஸ்கர்:

சத்தீஸ்கரில் நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படும் நிலையில், ஏப்ரல் 7 முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் நேற்றைய கரோனா பாதிப்பு 10,310ஆகும்.

பஞ்சாப்: 

பஞ்சாப் மாநிலத்தில் பல மாவட்டங்களில் கடந்த மாதம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தியுள்ளனர். பஞ்சாபில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,963ஆகும்.

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை அனைத்து நகரங்களிலும் 60 மணிநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மபியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள 4 முக்கிய மாவட்டங்களுக்கு இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம்:

நாள்தோறும் 5ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா, லக்னெளவ், கான்பூர், வார்னாசி உள்ளிட்ட நகரங்களில் இரவுநேர பொதுமுடக்கம் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் 6,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT