தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 5,000-ஐ கடந்தது கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் புதிதாக 5,441 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,20,827ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,752, செங்கல்பட்டில் 465, கோவையில் 473, திருவள்ளூரில் 195, திருப்பூரில் 148 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 23 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,863ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,890 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,74,305 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 33,659 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணிநேரத்தில் 87,505 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT