குஜராத்தில் மேலும் 7,410 பேருக்கு கரோனா
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,410 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,410 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,
குஜராத் மாநிலத்தில் சமீப காலமாகத் தொற்று அதிகளவில் பரவி வருகின்றது. அதன்படி, ஒரேநாளில் 7,410 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த 3,67,616ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று காரணமாக 73 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்தம் 4,995 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்த 2,642 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து 3,23,371 பேர் குணமடைந்தனர். தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 39,250 பேர் உள்ளனர்.