முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா அச்சுறுத்தல்: ஏப்.19-ல் மக்களவைத் தலைவர் ஆலோசனை

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் ஏப்ரல் 19-ல் ஆலோசனை நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
பகிர்:

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் ஏப்ரல் 19-ல் ஆலோசனை நடைபெறவுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தப்படுவது பற்றி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, எதிர்க்கட்சித் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.